பாகிஸ்தானில் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய உளவு அமைப்பை பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பகதுன்க்வா மாகாணத்தில் அணைக்கட்டும் பணி நடந்து வரும் நிலையில் இதில் சீனாவை சேர்ந்த பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 14ம் தேதி சீன பொறியாளர்கள் உள்ளிட்ட பலரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி பலர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து சீன அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணை முடிந்த நிலையில் பேட்டியளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி “இந்த பேருந்து விபத்து திட்டமிடப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல். இதற்கான திட்டம் ஆப்கானிஸ்தானில் போடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் இந்திய உளவு அமைப்பான “ரா”, ஆப்கன் தேசிய இயக்குனரகம் ஆகியவை உள்ளன” என கூறியுள்ளார். இந்தியா மீது பாகிஸ்தான் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.