Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை

Advertiesment
சசிகலாவுக்கு சிறையில் சலுகை அளித்தது உண்மைதான்: அதிர்ச்சி அறிக்கை
, ஞாயிறு, 20 ஜனவரி 2019 (16:11 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் இருந்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதாக சிறைத்துறை உயரதிகாரிகள் மீது பெங்களூர் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா ஐபிஎஸ் குற்றஞ்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இந்த குற்றச்சாட்டை அப்போதைய கர்நாடக அரசும் மறுத்தது. அதுமட்டுமின்றி ஐஏஎஸ் அதிகாரி ரூபாவை இடமாற்றமும் செய்தது.

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்த அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அறிக்கையின் விபரம் வெளியே வராத நிலையில் தற்போது இந்த அறிக்கையின் விபரங்கள் கசிந்துள்ளது. அதன்படி பெங்களூரு சிறையில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு சிறையில் விஐபி-களுக்கான சலுகை வழங்கப்பட்டது உண்மைதான் என உயர்மட்டக்குழு ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

webdunia
இதுகுறித்து கருத்து கூறிய ரூபா ஐஏஎஸ், 'என்னுடைய குற்றச்சாட்டுக்கள் உண்மை என அறிக்கை வந்திருப்பதில் மகிழ்ச்சி. சசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்: கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்