Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவன் முன்னிலையில் மனைவிக்கு பாலியல் சீண்டல் : குற்றவாளிகள் கைது

Advertiesment
கணவன் முன்னிலையில் மனைவிக்கு பாலியல் சீண்டல் : குற்றவாளிகள் கைது
, செவ்வாய், 1 ஜனவரி 2019 (17:23 IST)
கர்நாடக மாநிலம் பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டம் நடக்கையில் கணவன் முன்னிலையிலேயே ஒரு பெண் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருக்கிறார்.
பெங்களூr நகரத்தில் உள்ள முக்கியமான இடத்தில் நேற்று இரவில் பல ஆண்களும் பெண்களும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
 
அப்போது கூட்டத்தில் புகுந்த சில ஆண்கள் பெண்களிடம்  தவறாக நடக்க முயற்சித்தினர். அப்போது ஒரு கணவன் மனைவி  இருவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் கணவன் முன்னிலையிலேயே அந்த  பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது.
 
இதுபற்றிக் கேட்ட கணவனை அடித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட கணவனும் மனைவியும்  அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பெண்களிடம் தவறாக நடந்தவர்களை தேடி கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரகாஷ் ராஜுக்கு ஆதரவு கொடுத்து களமிறங்கிய ஜிக்னேஷ் மேவானி!