Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடியின் மௌனம் மிகவும் ஆபத்தானது..பிரியங்கா எச்சரிக்கை

Advertiesment
மோடியின் மௌனம் மிகவும் ஆபத்தானது..பிரியங்கா எச்சரிக்கை
, வியாழன், 5 செப்டம்பர் 2019 (18:42 IST)
நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து மோடி மௌனம் சாதிப்பது மிகவும் ஆபத்தானது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி 2.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நாட்டில் உருவாகியிருக்கும் பொருளாதார மந்தநிலை குறித்து பிரதமர் மோடி மௌனம் சாதிக்கிறார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், ’தினமும் பொருளாதார சரிவு குறித்து செய்திகள் வருகின்றன. இதற்கு மோடி அமைதி காத்துவருகிறார். இந்த இரண்டும் மிகவும் ஆபத்தானது. இதற்கு மத்திய அரசிடம் எந்த தீர்வும் இல்லை, மன்னிப்பு கேட்பதும், வார்த்தைகளால் சமாளிப்பதும், வதந்திகளும் இந்த பொருளாதார சரிவை போக்குவதற்கு எந்த பயனும் அளிக்காது” என கடுமையாக ஹிந்தி மொழியில் குற்றம் சாட்டியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”ஜெயலலிதா இருக்கும்போதெல்லாம் அமைச்சர்கள் இப்படி இல்லை”.. திருமாவளவன் கருத்து