ரஷ்யாவில் நடைபெற்ற தூர கிழக்கு பிராந்திய பொருளாதார கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கிழக்கு பிராந்திய வளர்ச்சிக்காக கணிசமான தொகை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் நடைபெற்ற இருநாள் தூர கிழக்கு பிராந்திய கூட்டத்தில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடியை அழைத்திருந்தார் ரஷ்ய அதிபட் விளாடிமிர் புதின். நேற்றும், இன்றும் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ரஷ்யா சென்ற மோடி அங்குள்ள கப்பல் கட்டும் தளம் போன்றவற்றை பார்வையிட்டார். பிறகு ரஷ்யா-இந்தியா இடைய பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சென்னையிலிருந்து ரஷ்யாவுக்கு சரக்கு கப்பல் செயல்படுவதற்கான ஒப்பந்தங்களும் அதில் கையெழுத்தாகி உள்ளது. இந்நிலையில் தூர கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக 1 பில்லியன் டாலர்கள் கடன் வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ரஷ்ய அரசுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், இந்தியாவை பொறுத்தவரை அதிர்ச்சியே அளித்திருக்கிறது. நாடு பொருளாதார மந்தநிலையால் திண்டாடி வருவதாக தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் நிலையில் 1 பில்லியன் டாலர் தருவதாக பிரதமர் வாக்குறுதி அளித்திருப்பது குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.