பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய கட்சியான பாஜக ஆட்சி அமைத்து நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என கூறப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.
பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் 3 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பதுக்கல் குறைந்தது. இந்தியர்கள் பலரும் சுவிஸ் வங்கியில்தான் கருப்பு பணத்தை பதுக்குகின்றனர்.
ஆனால், கடந்த மூன்று ஆண்டைவிட இந்த ஆண்டு கருப்பு பண பதுக்கல் 50% உயர்ந்துள்ளது. அதாவது சுமார் ரூ.7 ஆயிரம் கோடி உயர்ந்துள்ளதாம். மேலும், இது குறித்து சில புள்ளி விவரங்கலும் வெளியாகியுள்ளது.
# ரூ.3,200 கோடி இந்திய ரூபாயாக வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளாக செலுத்தப்பட்டுள்ளது.
# பிற வங்கிகள் மூலமாக சுவிஸ் வங்கிகளில் போடப்பட்ட தொகை ரூ.1,050 கோடி.
# பங்குகள் உள்ளிட்ட பிற வகைகளில் செலுத்தப்பட்ட தொகை ரூ.2,640 கோடி.
டிமானிடைசேசன் நடவடிக்கைகள் மூலம் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்று கூறி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு புது 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மாற்றத்தால், கருப்பு பண பதுக்கல் ஒழியும் என கூறப்பட்ட நிலையில், சுவிஸ் வங்கியில் பண பதுக்கல் சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்த மத்திய நிதி அமைச்சர் சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் கருப்பு பணம் அல்ல என தெரிவித்தார்.
இந்தநிலையில் இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, மோடி ஸ்விஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பேன் என்றார். ஆனால் தற்பொழுது ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்புப்பணம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதற்கு விளக்கமளித்த மத்திய அமைச்சர்கள் வங்கியில் இருப்பது கறுப்புப்பணம் அல்ல என கூறியுள்ளனர். அங்கு இருப்பது வெள்ளை பணம் என்றால். ஸ்விஸ் வங்கியில் இருப்பதாக மத்திய அரசு கூறிவந்த கறுப்பு பணம் எங்கே உள்ளது என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.