வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி, தனது தொகுதியான வயநாடுக்கு வருகை புரிந்தார். இந்த பயணத்தின்போது அவர் நெல் வயல்களைச் சுற்றிப் பார்த்தார். மேலும் பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாயி செறுவயல் ராமனை அவரது இல்லத்தில் சந்தித்தார். அங்கு சுமார் அறுபது வகையான பாரம்பரிய விதைகள் பாதுகாக்கப்பட்டு வருவதை கண்டறிந்து, அவரது தனித்துவமான இயற்கை விவசாய முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், ராமன் பாடிய பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல்களை கேட்ட பிரியங்கா, தானும் அதை ரசித்துப் பாடினார். ராமனின் வழிகாட்டுதலின் கீழ், பழங்குடியினரின் பாரம்பரிய வில் மற்றும் அம்புகளைப் பயன்படுத்தவும் பிரியங்கா முயற்சி செய்தார்.
தனது 10 நாள் பயணத்தின் நோக்கம், "இங்குள்ள பிரச்சினைகளை ஆழமாக புரிந்துகொண்டு, அவற்றை எவ்வாறு தீர்ப்பதற்கு உதவ முடியும் என்பதை ஆராய்வது" என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.