Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது சேவை செய்ய என்னை அன்னை தெரசா அழைத்தார்: வயநாடு பிரச்சாரத்தில் பிரியங்கா..!

Mahendran
செவ்வாய், 29 அக்டோபர் 2024 (10:53 IST)
எனது அப்பா ராஜீவ் காந்தி இறந்தபோது, அன்னை தெரசா எங்கள் வீட்டிற்கு வந்து என்னை பொது சேவை செய்ய அழைத்தார் என வயநாடு தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடும் நிலையில், அவர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், என் தந்தை மறைந்து ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு பிறகு அன்னை தெரசா எங்கள் வீட்டிற்கு வந்ததாகவும், என் அறைக்குள் வந்து என் தலையில் கை வைத்து ஆசீர்வதித்ததாகவும், பின்னர் எங்களுடன் சேர்ந்து ‘நீ சேவை செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

 ஐந்து ஆண்டுகளுக்கு பின் திருமணம் முடிந்து, குடும்ப வாழ்க்கையில் இணைந்த பிறகு டெல்லியில் உள்ள அன்னை தெரசா டிரஸ்டில் பணியாற்றினேன். அங்கு சிறு குழந்தைகளுக்கு ஹிந்தி கற்றுத்தருவது போன்ற வேலைகளை செய்தேன் என்றும் இதை முதன்முதலில் இப்போதுதான் பொதுவெளியில் கூறுகிறேன் என்றும் தெரிவித்தார்.

வயநாடு நிலச்சரிவு பாதிப்பின்போது கூட இங்குள்ள மக்கள் நம்பிக்கையுடன் பேசினார்கள். வயநாடு மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து தைரியத்துடன் போராடினார்கள். இயற்கை அழகால் நிறைந்த பூமி வயநாடு என, அவர் வயநாடு மக்களை பாராட்டியுள்ளார்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments