Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபி சட்டமன்ற தேர்தல்: முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தியா?

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (15:10 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே வியூகம் அமைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே பிரியங்கா காந்தியை உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்னிறுத்தி வருகிறது காங்கிரஸ் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விரைவில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தி தான் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
 
யோகி ஆதித்யநாத் போன்ற வலுவான முதல்வர் வேட்பாளரை எதிர்க்க வேண்டுமானால் பிரியங்கா காந்தி தான் சரியான வேட்பாளராக இருப்பார் என அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments