Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டை காலி செய்யும் பிரியங்கா காந்தி; பாஜக எம்.பிக்கு டீ விருந்து!

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (08:53 IST)
டெல்லியில் உள்ள அரசு இல்லத்திலிருந்து பிரியங்கா காந்தி வெளியேற உள்ள நிலையில் பாஜக எம்.பி ஒருவருக்கு டீ விருந்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் பொதுசெயலாளரான பிரியங்கா காந்திக்கு 1997ம் ஆண்டில் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்ட போது அரசு சார்பாக டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட்டில் உள்ள அரசினர் இல்லம் தங்குவதற்காக அளிக்கப்பட்டது. தற்போது அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு மாற்றப்பட்டதால் ஆகஸ்டு 1க்குள் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை தொடர்ந்து வீட்டை காலி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி குருகிராமில் தற்காலிகமாக ஒரு வீட்டையும் தங்க ஏற்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் பிரியங்கா காந்தி இதுநாள் வரை தங்கியிருந்த வீடு பாஜக எம்.பி அனில் பலூன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தான் இதுநாள் வரை தங்கியிருந்த வீட்டில் புதிதாக தங்க இருக்கும் பாஜக எம்.பிக்கு தேநீர் விருந்து அளிக்க பிரியங்கா காந்தி தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது. இதற்கு பாஜக எம்.பி தரப்பில் பதில் அளிக்கப்பட்டதா என விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments