சிறைக் கைதிகள் மனைவியுடன் இரண்டு மணி நேரம் தனிமையில் இருக்க அனுமதி என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
சிறையில் உள்ளவர்கள் குடும்பத்தினரை பார்க்க மட்டுமே அனுமதி கிடைக்கும் என்பதும் தனிமையில் சந்திக்க வாய்ப்பில்லை என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சிறையில் இருக்கும் கைதிகள் தங்கள் மனைவி அல்லது காதலியை தனிமையில் சந்திக்க 2 மணிநேரம் அனுமதிக்கலாம் என்றும் இது தனி மனித அடிப்படை உரிமை என்றும் பஞ்சாப் அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தி உள்ளது
முதல் முறையாக இந்தியாவிலேயே பஞ்சாப் சிறைத்துறை இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் விரைவில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற ஒரு திட்டம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த திட்டத்திற்காக சிறை கைதியும் அவருடைய மனைவியும் தனிமையில் இருப்பதற்கான அறைகளையும் பஞ்சாப் சிறைத்துறை ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது