Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2வது திருமணம் செய்த கணவனை மின்கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்த மனைவி!

Advertiesment
wife husband
, ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (15:09 IST)
2வது திருமணம் செய்த கணவனை மின்கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்த மனைவி!
இரண்டாவது திருமணம் செய்த கணவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்த மனைவியால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அகிலா என்பவரை ஸ்ரீகாந்த் என்பவர் கடந்த 4 ஆண்டுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அகிலா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனைவியை விட்டு பிரிந்து இருந்த ஸ்ரீகாந்த் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது
 
இதனால் ஆத்திரமடைந்த அகிலா இரண்டாவது திருமணம் செய்த கணவனை மின்கம்பத்தில் கட்டி வைத்து அவருக்கு செருப்பு மாலை அணிவித்து செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணன் ஆ.ராசாவை தாக்கினால் அமைதியாக வேடிக்கைப் பார்க்க மாட்டோம்: சீமான்