மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜகவுக்காக வாக்கு சேகரிக்க சென்ற பிரதமர் மோடி சொன்ன புதுக்கணக்கு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அக்டோபர் 21 அன்று நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் மோடி இரு மாநிலங்களிலும் நடைபெறும் பிரச்சார கூட்டங்களில் கலந்து பேசி வருகிறார். முன்னதாக ஹரியானா சென்ற அவர் அங்குள்ள மக்களிடம் பேசிய அவர் “பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து அளிக்கப்படும் ஆற்று நீர் இனி ராஜஸ்தான், ஹரியானா மக்களுக்காக திருப்பி விடப்படும்” என கூறினார்.
தற்போது மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை புகழ்ந்து பேசினார். அப்போது அவர் “ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது சாதாரண கணித சூத்திரம். ஆனால் தேவேந்திரர் என்ற ஒன்றும், நரேந்திரனாகிய நானும் சேர்ந்தால் இரண்டல்ல; அது பதினொன்று. கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்களது முதல்வர், பிரதமர் உறவால் மஹாராஷ்டிரம் பல்வேறு வளர்ச்சிகளை அடைந்துள்ளது.” என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி கூறிய இந்த புதிய கணித சூத்திரம் மகாராஷ்டிராவில் பாஜக மகாராஷ்டிராவில் ஏற்படுத்தியுள்ள வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதற்காக கூறப்பட்டது. ஏற்கனவே 2017 குஜராத் சட்டசபை தேர்தலில் இந்த புது ஃபார்முலாவை ஏற்கனவே மோடி கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.