இன்று இஸ்லாமிய புனித பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாட்டு மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி “இனிய ரமலான் வாழ்த்துகள். நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதர உணர்வை இந்த நல்ல தருணம் மேம்படுத்தட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும்” என்று வாழ்த்தியுள்ளார்.
ரம்ஜானை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் “ரமலானையொட்டி நமது முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மனிதர்களுக்கு சேவை செய்யவும், ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் பாடுபட நம்மை நாமே அர்ப்பணம் செய்து கொள்ள உறுதி ஏற்போம்” என்று தெரிவித்துள்ளார்.