Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியா? சுனிதா கெஜ்ரிவால் தலைமையில் அவசர ஆலோசனை!

Siva
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (15:33 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் டெல்லி முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய விட்டால் டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜக கூறிவரும் நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கெஜ்ரிவால் இப்போதைக்கு வெளியே வர வாய்ப்பு இல்லை என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கெஜ்ரிவால் இல்லத்தில் சுனிதா கெஜ்ரிவால் உடன் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை செய்து வருவதாகவும் இன்னும் சில மணி நேரத்தில் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்ய அவரது மனைவி சுனிதா முதலமைச்சராக பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகிறது

டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments