Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“கெஜ்ரிவால் பதவி விலக கூடாது''-ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்

Advertiesment
“கெஜ்ரிவால் பதவி விலக கூடாது''-ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்

sinoj

, செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (14:57 IST)
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே டெல்லி துணைமுதல்வர் மணீஸ் சிசோடியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இதையடுத்து, தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவும் இவ்வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
 
இவ்வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இவ்வழக்கின் விசாரணை  நடந்து வரும்  நிலையில், வரும் மக்களவை தேர்தலையொட்டி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பதிலாக அவரது மனைவி சுனிதா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
இந்த நிலையில், சிறையில் உள்ள கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் இருந்து விலகக் கூடாது என ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
இதுதொடர்பாக, இன்று கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை நேரில் சந்தித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள், எந்த சூழ் நிலையிலும் டெல்லி முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவால் பதவி விலகக்கூடாது. டெல்லியில் 2 கோடி மக்கள் கெஜ்ரிவாலும் இருக்கிறார்கள். டெல்லி அரசை சிறையில் இருந்தபடியே கெஜ்ரிவால் இயக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
 
மேலும், டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 55 பேர் இன்று சுனிதா கெஜ்ரிவாலை நேரில் சந்தித்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 4 பேர் சிறையில் உள்ளனர்.
 
மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக சிறையில் உள்ள ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த நாட்டில் ஜனநாயகம் பிழைத்திருக்குமா? இல்லையா? என்ற கவலை எனக்கு வந்திருக்கிறது- ப.சிதம்பரம் பேச்சு!