டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து, ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்து, திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் கடந்த மார்ச் 21-ம் தேதி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறையின் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
கெஜரிவாலை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க அவசியமில்லை என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்தது. இதை அடுத்து ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவல் விதித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அரவிந்த் கெஜரிவால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள இரண்டாம் எண் அறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார்.