குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு விரையில் வரும் மார்ச் 30 ஆம் தேதி அறுவைச் சிகிச்சை செய்யவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாந்த் கோவிந்த் சமீபத்தில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்துக் கேள்விப்பட்ட பிரதமர் மோடி மருத்துவமனையில் குடியரசுத்தலைவரின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குடியரசுத்தலைவருக்கு வரும் மார்ச் 30ம் தேதி இருதய அறுவைச் சிகிச்சை செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.