Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடியரசு தலைவர் உரையை புறக்கணித்த எதிர்கட்சிகள்!

Advertiesment
Union Budget 2021
, வெள்ளி, 29 ஜனவரி 2021 (12:01 IST)
விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி எதிர்கட்சிகள் குடியரசு தலைவர் உரையை புறக்கணித்துள்ளன.

 
கடந்த ஆண்டில் கொரோனா மற்றும் கொரோனா காரணமாக ஊரடங்கு காரணமாக இந்திய பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலில் முக்கிய சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் விவசாய போராட்டத்திற்கு இடையே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவது சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இன்று தொடங்கியுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த கலந்து கொண்டு உரையாற்றினார். ஆனால் வேளாண் சட்டங்களை திரும்ப பெறாதது, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி எதிர்கட்சிகள் குடியரசு தலைவர் உரையை புறக்கணித்துள்ளன.
 
ஜனாதிபதி உரையை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள் பட்டியலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, தேசிய மாநாடு, சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சிகர சோசலிஸ்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மதிமுக, கேரள காங்கிரஸ் (எம்), அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, ஆம் ஆத்மி கட்சி, சிரோமணி அகாலி தளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தியாகத் தலைவி சின்னம்மா!! அதிமுகவினர் கலக்கல் போஸ்டர்