Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (09:22 IST)
ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் ஜாதி மத இன வேறுபாடின்றி ஏழை பணக்காரர் பேதமின்றி பாமரர் முதல் பதவியில் இருப்பவர்கள் வரை அனைவரையும் தாக்கி வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் உள்பட பல நாட்டு பிரதமர்கள் மட்டும் அமைச்சர்களையும் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து ஜனாதிபதி மாளிகையில் குடியிருக்கும் 25 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது
 
ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து ஜனாதிபதி வளாகத்தில் பணியாளர்களுக்கு என ஒதுக்கப்பட்டு இருக்கும் 30 குடும்பத்தை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும், அவர்களிடம் தொடர்பில் இருந்த மேலும் 95 குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மொத்தம் 125 குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments