Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஷ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியாவை தேடும் 4 தனிப்படைகள்

Advertiesment
praveen thogadia
, திங்கள், 15 ஜனவரி 2018 (22:30 IST)
விஷ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியா திடீரென மாயமாகிவிட்டதால் அவரை தேடும் பணியில் 4 தனிப்படைகள் ஈடுபட்டு வருவதாக வெளிவந்த தகவலை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் போலீசார் இன்று விஷ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியாவின் அகமதாபாத் வீட்டிற்கு ஒரு வழக்கு குறித்த விசாரணைக்கு சம்மன் அளிக்க சென்றனர். ஆனால் பிரவீன் தொகாடியா வீட்டில் இல்லாததால் ராஜஸ்தான் போலீசார் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குஜராத் போலீசார் உடனடியாக 4 தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வருகின்றனர்.

 பிரவீன் தொகாடியாவை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்துவிட்டு மாயமாகி போனதாக நாடகமிடுவதாக விஸ்வ இந்து பரிசத் தொண்டர்கள் ஆவேசம் அடைந்திருக்கும் நிலையில் இந்த செய்தியை போலீசார் மறுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாலையிலிருந்து முதல் மாடிக்கு பறந்த கார்