Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் இதைதான் எதிர்பார்க்கின்றனர்… காங்கிரஸை பரிந்துரை செய்யும் பிரசாந்த் கிஷோர்!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (15:28 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மரணத்தை அடுத்து எதிர்க்கட்சிகள் ஆளும் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

தமிழகத்தில் முக ஸ்டாலின், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆகியோர்களுக்கு சமீபத்தில் வெற்றியைத் தேடித்தந்தவர் பிரசாந்த் கிஷோர். மூவரையும் முதல்வராகிய பிரசாந்த் கிஷோர் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தியை முதல்வராக்க தீவிரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரையும் சந்தித்து நீண்ட நேரம் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை செய்தார். இது கட்சிக்குள்ளாகவே சலசலப்புகளை உருவாக்கியது. இந்நிலையில் இப்போது எதிர்க்கட்சிகள் பழம்பெரும் கட்சியோடு இணைந்து செயல்பட வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி குறித்து தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸில் அமைப்பு ரீதியாகவும், ஆழமான பிரச்சனைகளும் உள்ளன என்றும் குறைபட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments