பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலனளிக்காது: பிரசாந்த் கிஷோர்

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (07:47 IST)
பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளின் அரசியல் ரீதியான கூட்டணி எந்தவிதமான பலனையும் அளிக்காது என்றும் சித்தாந்த ரீதியான கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசனை கூறும் பிரசாந்த் கிஷோர் சித்தாந்தத்தின் அடிப்படையில் கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். 
 
இந்துத்துவா சித்தாந்தத்தை எதிர்த்து போராட சித்தாந்தங்களின் கூட்டணி இருக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் பாஜகவை வீழ்த்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
காந்தியவாதிகள், அம்பேத்கரிஸ்டுகள், சோசியலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் ஆகியோர்களின் சித்தாந்த கூட்டணி வேண்டும் என்றும் பாஜகவில் வீழ்த்த வேற எந்த வழியும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் அரசியல் ரீதியான ஒற்றுமை எந்தவிதமான பலனையும் அளிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல் முடிவுகள்.. ஆரம்பகட்ட நிலவரத்தில் பாஜக கூட்டணி முன்னணி..!

ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்.. இருவர் மயக்கம்..!

வாக்கு எண்ணும் முன்பே வெற்றி கொண்டாட்டம்.. 500 கிலோ லட்டு ஆர்டர் செய்த NDA

டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் முகமது வீடு இடித்து தரைமட்டம்.. பாதுகாப்பு படை அதிரடி..!

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தரையிறங்கிய விமானம்.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments