Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறையில் இருக்கும் ரௌடிக்கு தபால் தலை வெளியீடு – குளறுபடிக்கு மன்னிப்பு!

சிறையில் இருக்கும் ரௌடிக்கு தபால் தலை வெளியீடு – குளறுபடிக்கு மன்னிப்பு!
, புதன், 30 டிசம்பர் 2020 (11:34 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் சிறையில் இருக்கும் தாதா சோட்டா ராஜனுக்கு தபால் தலை வெளியிட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிறையில் இருக்கும் முன்னாள் தாதாவான சோட்டா ராஜன் மற்றும் சிறையில் வைத்தே கொலை செய்யப்பட்ட முன்னா பஜ்ரங்கி ஆகியோர்களின் புகைப்படத்துடன் கூடிய தபால் தலை வெளியானது. இது சம்மந்தமாக ஊடகங்களில் செய்தி வெளியாகி சர்ச்சை எழுந்தது.

இப்போது அது சம்மந்தமாக தபால் துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் ‘ மை ஸ்டாம்ப் திட்டத்தின் கீழ் ஒரு நபர் பணம் கட்டி இந்த இருவருக்கும் தபால் தலை வெளியிட்டுள்ளார். இது சம்மந்தமாக கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இனிமேல் இதுபோல தவறுகள் நடக்காது. மேலும் விதிகளை மீறி குற்றவாளிகளுக்கு ஸ்டாம்ப் வெளியிட்ட அந்த நபர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறியுள்ளது.

மை ஸ்டாம்ப் திட்டத்தின் கீழ் ஒரு நபர் தனது குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியவர்களின் பிறந்தநாள் பணி ஓய்வு ஆகியவற்றுக்காக பணம் செலுத்தி ஸ்டாம்ப் வெளியிட்டுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ் இல்லை என மறுத்துவந்த ரஷ்ய சாமியார் கைது