Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2000 ரூபாய் நோட்டுக்கள் போல் 500 ரூபாயும் திரும்ப பெறப்படுமா? டிஜிட்டலுக்கு மாற வலியுறுத்தல்..!

Mahendran
புதன், 4 ஜூன் 2025 (13:32 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, அதன் பின் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், 2000 ரூபாய் நோட்டுகளும் சில ஆண்டுகள் கழித்து திரும்ப பெறப்பட்ட நிலையில், தற்போது புதிய 500 ரூபாய் நோட்டுகளும் திரும்ப பெறப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஏ.டி.எம்களில் 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் அதிகம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. எனவே தான், 2000 ரூபாய் நோட்டுகள் போல் 500 ரூபாய் நோட்டுகளும் திரும்ப பெறப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
 
மேலும், மக்கள் முழுக்க முழுக்க டிஜிட்டலுக்கு மாற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்பதும், ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 பெரிய பண பரிவர்த்தனை அனைத்தும் டிஜிட்டலில் மாறிவிட்டால், 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டு மட்டும் சிறிய செலவுகளுக்கு போதும் என்று திட்டமிடப்படுகிறது என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 ரூபாய் நோட்டுக்கள் போல் 500 ரூபாயும் திரும்ப பெறப்படுமா? டிஜிட்டலுக்கு மாற வலியுறுத்தல்..!

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு வரும் அமித்ஷா.. பாஜக நிர்வாகிகளை சந்திக்க திட்டம்..!

பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்

நோய்க்கிருமிகளை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள் கைது.. மிகப்பெரிய விபரீதம் தடுப்பு..!

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments