Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு வரும் அமித்ஷா.. பாஜக நிர்வாகிகளை சந்திக்க திட்டம்..!

Mahendran
புதன், 4 ஜூன் 2025 (13:25 IST)
தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில், மதுரையில் சமீபத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை அடுத்து மத்திய அமைச்சர் அமித்ஷா, மதுரைக்கு வர இருப்பதாகவும், ஜூன் 8-ம் தேதி அவர் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மாநில கட்சி தலைவர்கள் மட்டுமின்றி, தேசிய கட்சி தலைவர்களும் சுறுசுறுப்பாகி வருகின்றனர். 
 
அந்த வகையில், மதுரைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜூன் 8-ம் தேதி வருகிறார். அவர் தென்மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
மதுரை ஒத்தக்கடையில் இந்த ஆலோசனை நடைபெறும் என்றும், நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று அமைச்சர் அமித்ஷா  அறிவுறுத்தல் படி நடக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
 
மதுரைக்கு அமித்ஷா வருவதை அடுத்து, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

அடுத்த கட்டுரையில்
Show comments