Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணியில் கிடந்த பூரான்.! ஓட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்.!!!

Senthil Velan
சனி, 10 ஆகஸ்ட் 2024 (13:24 IST)
கேரளாவில் செயல்பட்டு வரும் உணவகத்தில் காவல்துறை எஸ்.ஐ வாங்கிய பிரியாணியில் பூரான் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரள மாநிலம் திருவல்லா கடப்ரா ஜங்ஷன் அருகே உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த உணவகத்தில் காவல்துறை எஸ்.ஐ  அஜித்குமார் பிரியாணி வாங்கி பாதியளவு சாப்பிட்டு விட்டார். அப்போது அதில் பூரான் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது  அலட்சியமாக பதில் அளித்தனர். பிரியாணியில் பூரான் கிடந்தது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் எஸ்.ஐ அஜித்குமார் புகார் செய்தார். அதன் பேரில் ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்த அதிகாரிகள், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதை கண்டுபிடித்தனர்.

ALSO READ: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை.! காங்கிரஸ் தான் காரணம்.! மத்திய அரசு தகவல்.!!

இதை அடுத்து அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். பிரியாணியில் பூரான் இருந்த சம்பவம் அசைவ பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொறுப்பு டி.ஜி.பி. நியமனம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் முறையீடு..

சென்னை சூளைமேடு மழைநீர் கால்வாயில் வாய் கட்டப்பட்ட நிலையில் சடலம்: மாநகராட்சியில் பரபரப்பு

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு: மத்திய அரசுக்கு CPI இரா.முத்தரசன் வேண்டுகோள்

நடனமாடி கொண்டிருந்தபோது பிரிந்த உயிர்! ஓணம் கொண்டாட்டத்தின்போது சோகம்..!

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்! 800 பேர் பலி! - ஓடிச்சென்று உதவிய இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments