பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 10 பேர் தங்கள் தொடர்பில் இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி கூறிய நிலையில், டெல்லியை அடுத்து பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சிக்கு ஆபத்து வந்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மற்றும் பஞ்சாப் என இரண்டு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்த நிலையில், டெல்லியில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்ததால் ஆட்சியை பறிகொடுத்தது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் சில எம்.எல்.ஏக்கள் தங்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. மேலும், 10 எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து, பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆபத்து ஏற்படும் என கூறப்படுவதால் அவசர ஆலோசனை நடைபெற்றுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் மணிஷ் சிசோடியா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் மற்றும் பஞ்சாப் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டதாகவும், இந்த கூட்டத்தில் சில முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.