மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, படுதோல்வியை சந்தித்தனர்.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, சரத் பவார் கட்சியிலும், உத்தவ் தலைமையிலான சிவசேனா கட்சியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு, உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து அவர் பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
அதேபோல், சரத் பவார் கட்சியும் மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், காங்கிரஸ் கட்சி இந்த மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.