Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாய்ப்பு கிடைத்தால் ஜெ.கேரக்டரில் நடிப்பேன்: மாம் பட விழாவில் ஸ்ரீதேவி

, வெள்ளி, 23 ஜூன் 2017 (06:35 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது அவருடன் அந்த காலத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ரீதேவி நடித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த 'மாம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்  முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தன் சிறு வயதில் கடவுளுக்கு நிகராக மதித்து வந்ததாக நடிகை ஸ்ரீதேவி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.



 


விஜய்யுடன் நடித்த 'புலி' படத்திற்கு பின்னர் ஸ்ரீதேவி நடித்த மாம்' படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் ஸ்ரீதேவி, அவரது கணவர் போனிகபூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ஸ்ரீதேவி, 'இந்தப் படத்தில் நடிப்பதற்கு என்னைத் தேர்வு செய்த இயக்குனருக்கு நன்றி. நான் நடித்த அனைத்து நல்ல பாத்திரங்களையும் எனக்குக் கொடுத்த அனைத்து இயக்குனர்களுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி செலுத்த வேண்டும்

Mom என்றால் அம்மா என்று அர்த்தம். தமிழகத்தில் அம்மா என்றாலே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைத்தான் குறிக்கும். அவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் ஜெயலலிதா அவர்களின் பாத்திரத்தில் நடிப்பது எனக்கு அளிக்கும் பெரிய பொறுப்பாக இருக்கும். சிறு வயதில் அவரை ஒரு கடவுளாகவே பாவித்துவந்தேன். அவருடன் பேச நேர்ந்த சில சந்தர்ப்பங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன.” என்று குறிப்பிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமல்-வரலட்சுமி ஜோடி சேரும் படத்திற்கு அஜித் பட டைட்டில்