இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவுக்கு போலி தடுப்பூசி விற்ற கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி என போலி தடுப்பூசிகளை மர்ம கும்பல் விற்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் பாராமதியில் கொரோனாவுக்கு போலி தடுப்பூசி விற்ற 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 3 போலி ரெம்டெசிவிர் மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற ரீதியிலும் விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.