அண்ணன் போலீஸ்.. தங்கை மாவோயிஸ்ட்.. எதிரெதிரே மோதிக்கொண்ட அதிர்ச்சி சம்பவம்

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (14:32 IST)
சத்தீஸ்கரில் அண்ணனாகிய போலீஸ், தங்கையாகிய மாவோயிஸ்டோடு நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா பகுதியில், பல ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. அப்பகுதியைச் சேர்ந்த வெட்டி ராமா என்பவர், அங்கே போலீஸாக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில், அப்பகுதியிலுள்ள மாவோயிஸ்டுகளுக்கும் போலீஸாருக்கும் துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்போது ராமாவுக்கு எதிராக நின்ற மாவோயிஸ்டுகளில் அவரது தங்கை வெட்டி கன்னியும் நின்றுள்ளார். அந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், வெட்டி கன்னி தப்பித்து விட்டார். இது குறித்து வெட்டி ராமா, தானும் ஒரு காலத்தில் மாவோயிஸ்ட்டாக இருந்ததாகவும், பின்பு மனம் மாறி போலீஸில் சேர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் ”எனது தங்கை கன்னிக்கு பல முறை திரும்ப வந்துவிடுமாறு கடிதம் அனுப்பினேன், ஆனால் அவள் வெளிவர மறுத்திவிட்டு போராட்ட வாழ்க்கையை நடத்தி கொண்டிருக்கிறாள்” என மனம் நொந்து தெரிவித்துள்ளார்.
 
அப்பகுதியில் உள்ள பல இளைஞர்கள் பலரும் மாவோயிஸ்ட்டு இயக்கத்தில் சேர்ந்து அரசாங்கத்தை எதிர்த்து போராடி வருகின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

செங்கோட்டையன் சொன்னது உண்மையா?!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!..

வெறும் பென்சிலை வைத்து சுவரில் ஓட்டை போட்ட நபர்.. சுவர் அவ்வளவு பலவீனமா?

குண்டு வெடிப்புக்கு பின் 3 முறை போன் செய்தேன்.. பதிலில்லை: 26 வயது மகனை இழந்த தந்தை உருக்கம்.!

குழந்தை பெற்று டிஸ்சார்ஜ் ஆன பெண் உயிரிழப்பு.. சிறப்பு விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments