Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போலீஸ் என்று கூறி மாணவியை பலாத்காரம் செய்த நபர்: போலீஸில் கைது

Advertiesment
போலீஸ் என்று கூறி மாணவியை பலாத்காரம் செய்த நபர்: போலீஸில் கைது
, செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (12:01 IST)
திருச்சியில், போலீஸ் என பொய் கூறி, மாணவியை காட்டுக்குள் இழுத்துச் சென்று பலாத்காரம் செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருச்சி துவாக்குடியில் உள்ள என்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில், மாஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு பெண் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அந்த கல்லூரியின் விடுதியில் தங்கியுள்ளார். மேலும் இவர் சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்தும் வந்துள்ளார்.

தனது காதலனுடன் அடிக்கடி வெளியே சென்று ஊர் சுற்றுவது வழக்கம். அதே போல் கடந்த 1 ஆம் தேதியும் ஹாஸ்டலில் அனுமதி இல்லாமல் கிளம்பிச் சென்று ஊர் சுற்றியுள்ளார். ஊர்சுற்றிவிட்டு இரவு வெகு நேரம் கழித்து திரும்பி வந்த இருவரும், கல்லூரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், இருவரிடமும் தான் போலீஸ் எனவும், இந்த நேரத்தில் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் எனவும் கேட்டுள்ளார். இருவரும் உண்மையை உளறிவுள்ளனர். உடனே அந்த நபர், காதலனை சரமாரியாக தாக்கவும், அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்பு அந்த பெண்ணை தான் ஹாஸ்டலில் விடுவதாக கூறி, காலேஜ் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

மறுநாள் காலை, அந்த மாணவி துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த நபரின் அடையாளங்களையும் கூறியுள்ளார். உடனே போலீஸார் காலேஜ் கேம்பஸில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து, அந்த நபரை கண்டுபிடித்து கைது செய்தனர். பின்னர் விசாரணையில், அந்த நபர் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்று தெரியவந்தது. மேலும் மணிகண்டன் பல வழக்குகளில் நிறைய முறை ஜெயிலுக்கு போய் வந்தவர் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாயை கற்பழித்தவனுக்கு தண்டனை தர வேண்டும்: 44 வருடங்கள் கழித்து நீதி கேட்கும் மகள்