Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் விவகாரத்தில் முரண்டு பிடிக்கும் இந்தியா: போட்டுக் கொடுத்த அமெரிக்கா!

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (14:21 IST)
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா சமாதானத்திற்கு வராமல் முரண்டு பிடிப்பதாக அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை நிலவி வருகிறது. சமீபத்தில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து இதனை பாகிஸ்தான் நேரடியாக எதிர்த்தது. 
 
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற அமெரிக்காவின் அறிவிப்பை இந்தியா ஏற்கவில்லை என்பதை டிரம்ப் ஒப்புக்கொண்டதாக இந்திய தூதர் தகவல் வெளியிட்டுள்ளார். 
காஷ்மீர் பிரச்சனையில் தலையிட்டு இருநாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க பலமுறை அமெரிக்கா முன்வந்தது. ஆனால் இதுவரை இந்தியா ஏற்றுக்கொண்டதில்லை என தெரிகிறது. 
 
இதற்கு முன்னர் டிரம்ப் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா சமரசம் செய்ய முன்வருவதை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல், காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா பழைய கொள்கையின் அடிப்படையில் இந்தியா பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்வது இல்லை எனவும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments