Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சட்டம் வந்தும் தீராத முத்தலாக் கொடுமை – 60 வயது முதியவர் கைது !

Advertiesment
சட்டம் வந்தும் தீராத முத்தலாக் கொடுமை – 60 வயது முதியவர் கைது !
, சனி, 10 ஆகஸ்ட் 2019 (09:13 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் 60 வயது முதியவர் ஒருவர் தனது இளம் மனைவிக்கு முத்தலாக் சொல்லியதை அடுத்து முத்தலாக் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தர்காவில் வேலை செய்து வருகிறார் சலீமுதீன் எனும் 60 வயது முதியவர். இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 23 வயது இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார். ஆனால் கல்யாணம் ஆனது முதல் அந்தப் பெண்ணைக் சித்ரவதை செய்ய ஆரம்பித்துள்ளார். இப்படியேக் கொடுமைகள் தொடர ஒருக் கட்டத்தில் முத்தலாக் சொல்லி அந்தப் பெண்ணை விவாகரத்து சொல்லியுள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண் போலிஸில் புகாரளிக்க விசாரணை மேற்கொண்ட போலிஸார் சலீமுதீனை கைது செய்துள்ளனர். முத்தலாக்க்குத் தடை விதித்து அண்மையில் மசோதா நிறைவேறியுள்ள நிலையில் அந்த சட்டப்பிரிவின் கீழ் சலீமுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவும் தேசபக்தியும் எப்போதும் ஒன்று சேராது: சுப்பிரமணியம் சுவாமி