Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புகார் அளித்த மனைவியின் மூக்கை அறுத்த கணவர்..

Advertiesment
புகார் அளித்த மனைவியின் மூக்கை அறுத்த கணவர்..
, வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (11:16 IST)
உத்தர பிரதேசத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவரை போலீஸில் புகார் கொடுத்த மனைவியின் மூக்கை கணவர் அறுத்துள்ளார்.

முத்தலாக் தடை மசோதா சமீபத்தில் மாநிலங்களவையில் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து முத்தலாக் தடை சட்டம் அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரது கணவர் போன் மூலம் மூன்று முறை தலாக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த பெண், போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரின் பேரில் இரு வீட்டாரும் வரவழைக்கப்பட்டு போலீஸார் அறிவுரை கூறினர். ஆனால் கணவர் ஒத்துவரவில்லை. இதனால் முத்தலாக் சட்டத்தின் படி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து அப்பெண் கணவர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு கணவரின் உறவினர்களால் அந்த பெண்ணின் மூக்கு அறுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணை துன்புறுத்தியும் இருக்கிறார்கள். இதனை அறிந்து கேட்கச் சென்ற அந்த பெண்ணின் தாயாரை கல்லாலும் அடித்துள்ளனர்.

இப்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரள, கர்நாடக மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!!