தனது டீக்கடை தொடர்பாக கடன் வாங்க வங்கிக்கு சென்ற நபரை 50 கோடி ரூபாய் கட்ட சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருஷேத்ரா பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் ராஜ்குமார். கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் டீக்கடைக்கு கூட்டம் குறைவாக வருவதால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளார் ராஜ்குமார். இதனால் வங்கியில் கடன் வாங்கி கடையை மேம்படுத்த முடிவு செய்துள்ளார்.
தற்போது சிறு, குறு தொழில்களுக்கு வங்கிகளில் கடன் அளித்து வருவதால் சிறிய அளவில் கடன் தொகை பெறுவதற்காக வங்கியை அணுகியுள்ளார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த அதிகாரிகள் ஏற்கனவே 50 கோடி ரூபாய் கடன் பெற்று கட்டாமல் உள்ள நிலையில் புதிய கடனை எப்படி செலுத்துவீர்கள் என கேட்டுள்ளனர். இதனால் ராஜ்குமார் அதிர்ச்சியைடைந்துள்ளார். மேலும் 50 கோடி ரூபாய் கடன் வாங்கும் அளவிற்கு தன்னிடம் சொத்து மதிப்பு கூட எதுவுமில்லை என்று கூறியுள்ள அவர் யாரோ பெற்ற கடன் தனது கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கலாம் என கூறி உரிய விசாரணை மேற்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறிய அளவிலாவது கடன் கிடைக்காதா என சென்றவருக்கு 50 கோடி கடன் இருப்பதாக தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.