மகாராஷ்டிரா மாநிலத்தில் திருமண வீட்டில் மணமகளின் தாய் மாமன் உணவில் விஷம் கலந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தலைமறைவாகி உள்ளவரை போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. இந்த திருமணத்தின் மணமகள், அவருடைய தாய் மாமா மகேஷ் பட் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
மணமகளின் பெற்றோர் இதற்கு சம்மதித்து கொண்டாலும் மணமகளின் தாய் மாமா மகேஷ் பட் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று அவர் செய்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போன நிலையில் திருமண வரவேற்பு நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்ட உணவில் விஷம் கலந்து விட்டு தலைமறைவாகி உள்ளதாக தெரிகிறது.
அவர் விஷம் கலந்த போது சிலர் தற்செயலாக பார்த்ததை அடுத்து விஷம் கலந்த யாரும் உணவை சாப்பிடவில்லை . இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் தாய் மாமா மகேஷ் பட்டுக்கு வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.