இந்தியாவில் பிரபலமாக விற்கப்படும் பழவகையான ட்ராகன் பழத்தின் பெயரை மாற்றுவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் பிரபலமாக விற்கப்படும் பழங்களில் ஒன்று டிராகன் பழம். இந்த பழம் இந்தியாவில் விளைவிக்கப்பட்டாலும் இதற்கு டிராகன் பழம் என பெயர் வந்ததன் காரணம் தெரியவில்லை.
இந்நிலையில் இந்த டிராகன் என்ற வார்த்தை சீனாவுடன் தொடர்புடையதாக உள்ளதால் அதன் பெயரை மாற்றுவதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. இந்த பழத்தின் தோற்றம் பார்க்க தாமரை மலரை போல இருப்பதால் கமலம் பழம் என இதற்கு பெயரிட உள்ளதாக முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் ரூபானியின் இந்த முடிவு குறித்து சமூக வலைதளங்களில் கிண்டலாக பேசி வரும் உள்ளூர் காங்கிரஸார் தங்களது கட்சி சின்னத்தின் பெயரை பழத்திற்கு வைக்க ரூபானி சீனாவை உள்ளே இழுக்கிறார் என்ற வகையில் பேசி வருவதாக தெரிகிறது.