சமீபத்தில் மேகாலயா திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது என்பது இந்த தேர்தலில் பாஜக இரண்டு மாநிலங்களில் கூட்டணி கட்சியின் ஆதரவுடன் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இன்று பதவி ஏற்க இருப்பதை அடுத்து பிரதமர் மோடி இன்றும் நாளையும் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மேகாலயா நாகலாந்து மற்றும் திரிபுரா செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக ஆதரவுடன் கூட்டணி கட்சிகள் ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று மாநிலங்களில் நடைபெறும் பதவி ஏற்பு விழாக்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும் இதற்காக இந்த மூன்று மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.