இந்திய அரசியலமைப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் அதுகுறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இந்தியாவிற்கு அரசியல் சாசனம் அமைக்கப்பட்ட நாள் இன்று இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்திய அரசியலமைப்பு தினம் குறித்து பல கட்சி அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசியலமைப்பு தினத்தில் பேசிய பிரதமர் மோடி “அம்பேத்கர் நாட்டிற்கு ஆற்றிய சேவை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை அரசியல் சாசனம் நிரூபித்துள்ளது. அம்பேத்கரின் சேவையை சிலர் வெளிப்படையாக பாராட்டத் தயங்குவது வேதனை அளிக்கிறது. அம்பேத்கரின் சேவையை அங்கீகரிக்க மறுப்பவர்களால் எப்படி இந்த தேசத்தை காப்பாற்ற முடியும்? அம்பேத்கரை ஏற்க மறுப்பவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.