Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்வத்தை ஈர்க்கும் வெள்ளெருக்கு விநாயகர்...!!

செல்வத்தை ஈர்க்கும் வெள்ளெருக்கு விநாயகர்...!!
, வியாழன், 25 நவம்பர் 2021 (23:56 IST)
வெள்ளெருக்கு வேரினால் செய்யப்பட்ட பிள்ளையாராய் இருப்பதுதான் முக்கியம். அதை சோதித்து வாங்கி வரவேண்டும். போலியானதாய் இருந்தால் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும்.
 
பிள்ளையார் வடிக்க வெள்ளை நிற பூக்கள் பூக்கும் வெள்ளை எருக்கன்செடிதான் தேர்வு செய்யப்பட வேண்டும். சுமாராக ஆறு ஆண்டுகள் வளர்ந்த செடியே சிலை  வடிக்க உகந்தது. அதுவும் செடியின் வடக்கு பக்கமாக செல்லும் வேரை பயன்படுத்துவது வழக்கம். 
 
முன்னதாக வெள்ளெருக்கன் செடிக்கு ஆகம முறைப்படி ஒரு மண்டல காலம் பூஜைகள் செய்வது ஐதீகம். தீய சக்திகள் இருக்கும் வாய்ப்பு உள்ள இடத்தில் வெள்ளெருக்கு செடி வளர்ந்திருந்தால், அதன் வேரானது விநாயகர் சிலை உருவாக்க பயன்படுத்த கூடாது.
வெள்ளெருக்கு வேரை எடுப்பதற்கு முன்னர் வேப்பிலை, கூழாங்கல், மா இலை, வில்வ இலை ஆகியவற்றை மாலை போல் கோர்த்து, அந்த வெள்ளெருக்கு  செடியை சுற்றி காப்பு கட்டப்படும். பிறகு, ஒருவாரம் கழித்த பின்னர் வெள்ளெருக்கு வேரை எடுத்து, தக்க முறையில் பதப்படுத்தி, விநாயகர் வடிவத்தை செய்ய பயன்படுத்த வேண்டும்.
 
வெள்ளெருக்கன் செடியானது அதீதமான உயிர் சக்தி கொண்டதாகும். எனவே அதனை பார்த்த உடனே வேரை வெட்டி எடுத்துவிடாமல்,  மேற்கண்ட பரிகார முறைகளை கடைப்பிடிப்பது சிறப்பான பலன்களுக்கு வழிவகுக்கும்.
 
வெள்ளெருக்கு  பிள்ளையாரை புதியதாக வீட்டுக்கு வாங்கி வந்தவுடன் ஒரு வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12குள் ராகு காலத்தில், அந்த விநாயகர் சிலை  முழுவதும் அரைத்த மஞ்சளை பூசி வைக்கவும்.
 
இதுபோல் அடுத்த வெள்ளிக்கிழமை ராகுகால சமயத்தில் சந்தன விழுதை விநாயகர் சிலை முழுவதும் பூசி  நிழலிலேயே உளற வைத்துக்கொள்ள வேண்டும். இதன் பிறகு உங்களது பூஜை அறையில் வைத்து எப்பவும்போல வழிபடலாம். தன ஆகர்ஷன சக்தியை அள்ளிக் கொடுக்கக் கூடிய வல்லமையானது இந்த வெள்ளருக்கு விநாயகருக்கு அதிகமாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கந்த சஷ்டி விரதம் இருப்போருக்கு கிடைக்கும் அற்புத பலன்கள் !!