ஹரியானாவில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு 50% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பூசி போட்டுக் கொள்ள செய்யவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் ஹரியானாவில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு உணவு விடுதிகள், மதுக்கடைகள் உள்ளிட்டவற்றில் பொருட்கள் வாங்கினால் 50% தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்களுக்கு 25% தள்ளுபடியும், இரண்டாம் டோஸ் எடுத்துக் கொண்டவர்களுக்கு 50% தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.