Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிறைய பேரை நாம இழந்துட்டோம்! – கண்கலங்கிய பிரதமர் மோடி?

நிறைய பேரை நாம இழந்துட்டோம்! – கண்கலங்கிய பிரதமர் மோடி?
, வெள்ளி, 21 மே 2021 (12:29 IST)
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் காணொலி ஆலோசனையில் பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களில் நோயாளிகளுக்கு படுக்கைகள், மருத்துவ வசதி, ஆக்ஸிஜன் போன்றவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் தேவையான உதவிகளை செய்து வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர்கள், மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பலருடன் அடிக்கடி காணொலி மூலமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

அவ்வாறாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி, கொரோனாவால் நாம் நிறைய பேரை இழந்து வருகிறோம். இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது என உணர்ச்சி வசப்பட்டதாகவும், கண் கலங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் டாக்ஸி ஆம்புலன்ஸ் திட்டம்! – மத்திய அரசு பாராட்டு!