Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவை வீழ்த்த யோகா சிறந்த வழிமுறை! – பிரதமர் மோடி பேச்சு!

Advertiesment
National
, ஞாயிறு, 21 ஜூன் 2020 (09:21 IST)
சர்வதேச யோகா தினமான இன்று யோகா செய்தலிஒன் அவசியம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார்.

இன்று 6-வது சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் யோகா செய்தலின் அவசியம் மற்றும் பயன்கள் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றும் அடையாளமாக யோகா உள்ளது. அனைவரும் வீட்டில் குடும்பத்தினருடன் யோகா செய்யுங்கள். கொரோனாவை வீழ்த்த யோகா சிறந்த வழி. யோகா நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது” என கூறியுள்ளார்.

மேலும் “யோகாவின் தேவையை தற்போது உலகம் உணர்ந்துள்ளது. நமது நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் நோய்களை எதிர்த்து போராட உதவும். கொரோனா நமது சுவாச மண்டலத்தை தாக்குகிறது. இதற்கு “பிராணாயமம்” என்ற சுவாச பயிற்சி யோகா செய்வதன் மூலம் நமது சுவாச மண்டலத்தை வலிமையாக்க முடியும்” எனவும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்போதான் தண்ணீர் திறந்து விட்டாங்க.. அதுக்குள்ள உடைப்பா! – அப்செட்டான புதுக்கோட்டை மக்கள்!