Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸ் கட்சியின் ஜெராக்ஸ்தான் ஆம் ஆத்மி! – பிரதமர் மோடி விமர்சனம்!

Advertiesment
PM Modi
, புதன், 16 பிப்ரவரி 2022 (15:13 IST)
பஞ்சாப், உத்தர பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் தேசிய கட்சியான பாஜக மாநிலங்களில் வெற்றிபெற தீவிர பிரச்சாரம், வியூகங்களை வகுத்து வருகிறது.

இந்நிலையில் அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பஞ்சாபில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளன. டெல்லிக்கு பிறகு ஆம் ஆத்மி பஞ்சாபை கவர்வதில் தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி “காங்கிரஸ் ஒரிஜினல் எனில் அதன் ஜெராக்ஸ்தான் ஆம் ஆத்மி கட்சி. காங்கிரஸ் பஞ்சாபை கொள்ளையடித்தது எனில், ஆம் ஆத்மி டெல்லியில் ஊழலில் ஈடுபட்டு வருகிறது. ரிமோட் கண்ட்ரோல் குடும்பமான காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் பஞ்சாப் மக்கள் பிரியாவிடை அளிக்க வேண்டும்” என பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனது வார்டை முன்மாதிரி வார்டாக மாற்றுவேன்..! – வேட்பாளர் சௌமியா தீவிர பிரச்சாரம்!