Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெர்மனி அதிபரின் வருகையால் தமிழகத்திற்கு அடித்த அதிர்ஷ்டம்!

ஜெர்மனி அதிபரின் வருகையால் தமிழகத்திற்கு அடித்த அதிர்ஷ்டம்!
, சனி, 2 நவம்பர் 2019 (10:10 IST)
கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி கிடைத்த போதிலும் தமிழகத்தில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு முறை பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் ‘கோபேக் மோடி’ என்ற குரல் தமிழகத்தில் ஒலித்து வருகிறது
 
இந்த நிலையிலும் தமிழகத்தின் மீது கடந்த சில மாதங்களாக பாஜகவுக்கு தனி மரியாதை இருப்பது போல் தெரிகிறது. இதற்கு உதாரணமாக ஐநாவில் பிரதமர் பேசும்போது தமிழின் பெருமையை எடுத்து கூறியது, சீன அதிபர் ஜி ஜிங்பிங் சந்திப்பை தமிழகத்தில் வைத்தது ஆகியவற்றை கூறலாம்
 
இந்த நிலையில் இந்தியாவிற்கு 3 நாள் அரசு முறை பயணமாக வருகை தந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அவர்களிடம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருவாறு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள ராணுவ தளவாட உற்பத்தி முனையங்களை பயன்படுத்த ஜெர்மனி முன்வரவேண்டும் என்றும் ஜெர்மன் அதிபர் மெர்கல்லிடம் பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் இதற்கு ஜெர்மனி அதிபர் ஒப்புக்கொண்டுள்ளதகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதன் முலம், தமிழகத்தில் அமைய உள்ள டிபென்ஸ் காரிடார் என்னும் ராணுவ தளவாட தொழில்வழி தடம் பெரும்வளர்ச்சி காணும் என்றும் இதனால் தமிழர்கள் பலருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது
 
வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை மனதில் வைத்து பாஜக இவ்வாறு செயல்பட்டு வருவதாக கூறப்படினும் தமிழகத்தில் தொழில் மேலோங்கினால் தமிழருக்கு நல்லதுதானே என்ற கருத்தும் நிலவி வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் வீட்டின் அருகிலேயே குப்பைகள் இருக்கும்போது?? .. நீதிமன்றம் கேள்வி