Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கீழடியில் வருகிறது உலக தரமான அருங்காட்சியகம்: முதல்வர் உறுதி!

கீழடியில் வருகிறது உலக தரமான அருங்காட்சியகம்: முதல்வர் உறுதி!
, வெள்ளி, 1 நவம்பர் 2019 (18:58 IST)
கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தும் விதமாக உலக தரத்தில் அருங்காட்சியம் ஒன்று அமைக்க இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் நடந்த தமிழ்நாடு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல அதிமுக அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அவ்விழாவில் பேசிய முதல்வர் “உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ். முதன்முதலில் எழுத்தறிவு பெற்றவர்கள் தமிழர்கள். வரலாற்று காலங்களில் கப்பல் கட்டுவதில் முன்னொடியாய் விளங்கியது தமிழ் சமூகம்” என்று பேசினார்.

மேலும் “தமிழர்களின் பெருமையை உலகுக்கு உணர்த்திய கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் உலக தரத்தில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னை முதல்வராக்குங்கள்! – மனு கொடுத்த ஸ்ரீகாந்த்!