Publish Date: Sun, 29 Jan 2023 (09:29 IST)
Updated Date: Sun, 29 Jan 2023 (09:31 IST)
பிரதமர் மோடி வெளியிட்ட ரூ.75 நாணயம்.. புகைப்படம் வைரல்
பிரதமர் மோடி சற்றுமுன் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட நிலையில் இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
என்சிசி என்று கூறப்படும் இந்திய தேசிய மாணவர் படையின் 75வது ஆண்டு அணி வகுப்பில் இன்று கலந்து கொண்ட பிரதமர் மோடி அதனை குறிப்பிடும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது, 75 ஆண்டுகளாக என்சிசி-ஐ பிரதிநிதிப்படுத்துவார்கள், அதில் அங்கம் வகுத்தவர்கள் தேசத்தை கட்டி எழுப்பியவர்களின் பங்களிப்பை பாராட்டுகிறேன் என்றும் பேசினார்.
என்சிசி படையினரின் உறுதிப்பாடு சேவை மனப்பான்மையால் இந்தியா பெருமிதம் அடைகிறது என்றும் அவர் புகழாரம் சூட்டினார். என்சிசி அமைப்பின் 75 வது ஆண்டு ஒட்டி சிறப்பு தபால் தலையையும் அவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது