Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நம்மிடமிருந்து அங்குலம் நிலத்தை கூட பறிக்க முடியாது! – மோடி கம்பீர உரை!

நம்மிடமிருந்து அங்குலம் நிலத்தை கூட பறிக்க முடியாது! – மோடி கம்பீர உரை!
, வெள்ளி, 3 ஜூலை 2020 (14:48 IST)
லடாக் எல்லை மோதல் நடந்த பகுதிக்கு இன்று திடீர் ஆய்வு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி ராணுவ வீரர்களுக்கு உற்சாக அளிக்கும் வகையில் உரையாற்றியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன – இந்திய படைகளிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பு வீரர்களும் பலியானார்கள். சீன ராணுவம் எல்லையில் அத்து மீறியதாலேயே இந்த மோதல் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் சீனா – இந்தியா இடையே உறவுநிலையில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் 59 செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளதுடன், இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளிலும் சீன நிறுவனங்களின் பங்களிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி திடீர் ஆய்வு பயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர் “இந்திய வீரர்களின் தியாகத்தை 130 கோடி மக்களும் நினைவு கூர்கிறார்கள். இந்திய வீரர்களின் வலிமை கண்டு எதிரிகள் அஞ்சி நடுங்குகிறார்கள். இந்தியாவிடமிருந்து ஒரு அங்குலம் நிலத்தை கூட யாராலும் பறித்துக் கொள்ள முடியாது. இந்திய வீரர்களின் வலிமை மலையை விட பெரியது என்பதை உலகம் உணர்ந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் திருக்குறளின் படைமாட்சி அதிகாரித்திலிருந்து குறளை உதாரணம் காட்டிய பிரதமர் “அமைதியை விரும்பும் நாம் தேவைப்பட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்கவும் தயார் என்பதை காட்டுவோம். நாம் புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர்தான். அதேசமயம் நாம் சுதர்சன சக்கரத்தையும் வைத்திருக்கிறோம்” என்று வீரர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீனவர்கள் பலி: இத்தாலிக்கு எதிரான வழக்கில் இந்தியாவுக்கு பின்னடைவு